/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை, நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ரெஸ்டோ பார்கள்; பெஞ்சல் புயல் மழை படங்கள்

ADDED : டிச 01, 2024 04:32 AM
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களில் ரெஸ்டோ பார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாநில மேற்கு எல்லைப் பகுதிகளில் ரெஸ்டோ பார்கள், பெரும்பாலும் குடியிருப்புகள் மத்தியில் உள்ளன. போதிய இடவசதி இன்றி, சாலை, குளம், ஏரி, நீர் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்து வாகன நிறுத்தம் அமைத்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் ரெஸ்டோ பார்களுக்கான விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல், கட்டடங்களை ஆய்வு செய்யாமல், அனுமதி அளித்து வருகின்றனர். இதனால், ரெஸ்டோ பார்கள் எதிரே சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருவதுடன், நீர்நிலை ஆக்கிரமிப்புகளால், விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆக்கிரமிப்புகள் குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தாலும், ரெஸ்டோ பார்களை அமைத்துள்ளவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகாரிகளும் அதன் மீது எந்தவித நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.