/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற சட்டசபை காவலர் கண்கள் மற்றும் உடல் தானம்
/
ஓய்வு பெற்ற சட்டசபை காவலர் கண்கள் மற்றும் உடல் தானம்
ஓய்வு பெற்ற சட்டசபை காவலர் கண்கள் மற்றும் உடல் தானம்
ஓய்வு பெற்ற சட்டசபை காவலர் கண்கள் மற்றும் உடல் தானம்
ADDED : பிப் 08, 2025 06:11 AM

புதுச்சேரி: ஓய்வு பெற்ற சட்டசபை காவலர் புண்ணியமூர்த்தியின் கண்கள் மற்றும் உடல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி, 64; ஓய்வு பெற்ற சட்டசபை காவலர். இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.
ஏற்கனவே, புண்ணியமூர்த்தி தனது குடும்பத்தினரிடம், தனது இறப்பிற்கு பின் கண்கள் மற்றும் உடலை தானமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, அவரது மனைவி லட்சுமி, மகள் கிருத்திகா ஆகியோர், அவரது உடலை தானமாக வழங்க, ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தனர்.
அவர் மூலம், இறந்த புண்ணியமூர்த்தியின் கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மேனகா முன்னிலையில், உடல் தானம் பதிவு ஆலோசகர் கந்தசாமி மற்றும் குடும்பத்தினர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரிக்குஉடலை தானமாக வழங்கினர்.