/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.40 மோசடி: தம்பதிக்கு வலை
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.40 மோசடி: தம்பதிக்கு வலை
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.40 மோசடி: தம்பதிக்கு வலை
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.40 மோசடி: தம்பதிக்கு வலை
ADDED : ஆக 12, 2025 01:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 68; ஒய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு, தனது நண்பர்கள் மூலம் புதுச்சேரியை சேர்ந்த பாலு, அவரது மனைவி சுமதி ஆகியோர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு பாலு கடன் சுமை அதிகரித்து உள்ளதால், வில்லியனுார் மெயின் ரோட்டில் தனது மனைவியின் பெயரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடம் தற்போது ரூ.1 கோடி மதிப்புடையதாகவும், அதனை உங்களுக்கு ரூ.40 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக மூர்த்தியிடம் தெரிவித்தார்.
இதைநம்பிய மூர்த்தி, அவர்களிடம் ரூ.40 லட்சம் கொடுத்து, அந்த இடத்தை கிரயம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 22ம் தேதி மூர்த்தி தான் வாங்கிய இடத்தில் கடை கட்டுவதற்கு சென்று பார்வையிட்டபோது, அங்கு வந்த சிலர் இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மூர்த்தி கிரயம் செய்த பத்திரத்தை ஆய்வு செய்தபோது, போலி என தெரியவந்தது.
இதுகுறித்து மூர்த்தி ரெட்டியார்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில், பாலு, அவரது மனைவி சுமதி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.