/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன உறுதியால் தடைகளை தாண்டி வெற்றி்பெறலாம்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
மன உறுதியால் தடைகளை தாண்டி வெற்றி்பெறலாம்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
மன உறுதியால் தடைகளை தாண்டி வெற்றி்பெறலாம்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
மன உறுதியால் தடைகளை தாண்டி வெற்றி்பெறலாம்; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஏப் 06, 2025 07:31 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் மூன்றாம் நாளான நேற்று செய்த உபன்யாசம்:
ராம நாமம் சொல்லிக் கொண்டு ஆகாசத்தில் செல்லும் அனுமனை உபசரிக்க, சமுத்ர ராஜன் தன் நண்பரான மைநாக மலையை அனுப்பினார். மைநாகமும் தன் உருவத்துடன் வெளிப்பட்டு, அனுமனுக்கு வந்தனம் சொல்லி, தன் மலையில் தங்கி இளைப்பாறி பூஜையை ஏற்றுக் கொள்ள வேண்டுவதற்காக, கடலிலிருந்து எழும்பி அனுமன் செல்லும் வழியில் நின்றான்.
அதை பார்த்த அனுமன், எதிர்த்து வந்தால் முடிப்போம். பிரார்த்தித்து வந்தால், மதிப்போம் என முடிவெடுத்து குறுக்கே வந்த மைநாக மலையை மோதித் தள்ளினார். ஹனுமானின் வேகத்தை அனுபவ பூர்வமாக உணர்ந்த அம்மலையும் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்து, மீண்டும் மேலெழுந்து ஹனுமனைப் பிரார்த்தித்தது.
அனுமனின் செயல் உறுதியையும், பராக்ரமத்தையும் அறிய விரும்பிய இந்திராதி தேவர்கள், நாக மாதா சுரசையை அனுமனைச் சோதிக்க ஏவினார்கள். சுரசையும், மிகக் கொடூரமான ராக் ஷச உருவுடன் வானத்தில் சென்றுகொண்டிருந்த அனுமனை மறித்து, வானர வீரனே! என்னைக் கடந்து செல்பவர்களை நான் எனக்கு உணவாக்கிக் கொள்ளலாம் என்பது பிரம்மா எனக்குத் தந்த வரம். கடும் பசியுடன் உள்ளேன். உன்னை விழுங்கப் போகிறேன். பசி என்று கூறியவுடன் அனுமன் உருகி விடுகின்றான். இப் புன்புலால் உடலை உனக்கு இரையாக ஆக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால், நான் வந்த காரியம் என் ஆண்டானுக்குச் செய்யும் தொண்டாகும். அத்தொண்டு நிறைவேற இந்த உடல் தேவைப்படுகிறது.
அதை முடித்து விட்டு யானே வந்து உனக்கு இரையாக ஆவேன் என சொன்னான். நாக மாதா அனுமன் காரியம் வெற்றி பெற வாழ்த்தி விடை கொடுத்தாள்.
அடுத்து, கோர உருவம் உடைய சிம்ஹிகா எனும் ராக் ஷசி அனுமனை மறிக்க, அனுமனும் அவள் வாயில் ராம நாமம் சொல்லிக் கொண்டு குதித்து விஸ்வ ரூபமெடுத்து உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து தன் இலக்கை நோக்கிப் பயணத்தார்.
எந்த செயலைச் செய்யும் போதும், மன உறுதி, தீர்க்க தர்சனம், புத்தி கூர்மை, செயல் திறமை கொண்டு செய்தால் எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் அவற்றைப் புறந்தள்ளி வெற்றி பெறலாம் என்பது, சுந்தர காண்டத்தில் அனுமனின் செயல் திறன் மூலம் நமக்கு உணர்த்தப் படுகிறது.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.