/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற நீதிபதிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
ஓய்வு பெற்ற நீதிபதிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 30, 2025 08:40 PM

புதுச்சேரி; புதுச்சேரி மாநில ஓய்வு பெற்ற நீதிபதிகள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் முருகபூபதி தலைமை தாங்கினார். துணை தலைவர் வீரநாத் ராவ், புஷ்பா துரைசாமி, பேட்ரிக் ஜார்ஜ், செயலாளர் சித்தார்த்தர், பொருளாளர் மார்கரெட் ரோஸ்லின், உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமபத்திரன், நல்ல தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் மூலம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பெறும் ஓய்வூதிய பலன்களுக்கு கவர்னருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின்நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கித்தர வேண்டும்.
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பி, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கவுரவித்த அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

