/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைவருக்கும் அருள வேண்டும் என்பதே ஆண்டாள் திருப்பாவையின் சாரம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
அனைவருக்கும் அருள வேண்டும் என்பதே ஆண்டாள் திருப்பாவையின் சாரம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
அனைவருக்கும் அருள வேண்டும் என்பதே ஆண்டாள் திருப்பாவையின் சாரம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
அனைவருக்கும் அருள வேண்டும் என்பதே ஆண்டாள் திருப்பாவையின் சாரம் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 15, 2024 06:47 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நேற்று உபன்யாசம் செய்ததாவது:
திருப்பாவையின் கடைசி பாசுரம் 29ம் பாசுரம் என்றும், 30ம் பாசுரத்தை ஆண்டாள் தன்னை பெரியாழ்வாரின் திருமகளாக அடையாளம் காட்டிக் கொண்டு, 29 பாசுரங்களைத் தவறாமல் ஓதுவதால் கிடைக்கும் பலன் சொல்லும் பாசுரமாக 30வது பாசுரத்தை அருளியுள்ளாள்.
மனம், மொழி, மெய் சுத்தத்துடன் கூடியிருந்து, எம்பெருமானைப் போற்றிப் புகழ் பாடி, அவனிடம் சரணாகதி செய்து சர்வ காலமும் பகவத் சேவை செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கும் நிலைக்கு நம்மை உயர்த்த உதவும் நன்னெறிகளைச் சொல்வதே கோதைப் பிராட்டி அருளியுள்ள திருப்பாவையின் சாரம்.
28ம் பாசுரத்தில் ஓம் என்ற ப்ரணவத்தைப் போன்று என்றும் நிலைத்திருக்கும் உன்னுடனான நம் உறவைப் பிரிக்கவே முடியாது என்று அருளிய ஆண்டாள், 29ம் பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அதற்குச் சிகரம் வைத்தற்போல், என்றென்றும், எக்காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நீயே எங்கள் உறவு, உனக்கு மட்டுமே நாங்கள் தொண்டு செய்யும் பேற்றினை அளித்து நீ அருள வேண்டும் கண்ணா, எங்களின் இத்தகையை நிலை என்றென்றும் நிலைத்திருக்கும்படி, வேறு எவ்வித மனமாச்சர்யங்களும் எங்களுக்கு ஏற்படாத வைராக்கியத்தை எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம் என்று காப்பவன், காப்பற்றப்படுவபவர்கள் என்ற தத்துவத்தையும் உள்ளுரைப் பொருளாக உணர்த்துகின்றாள்.
திருப்பாவையின் 29 பாசுரங்கள் மூலம் நம் விசிஷ்டாத்வைத சம்ப்ரதாயத்தின் ஆணி வேரான சரணாகதித் தத்துவத்தை வழங்கி திருப்பாவையே ஒரு சரணாகதிப் பதிகம் என்றருளியுள்ளாள் என்பது பொருத்தமாகவே இருக்கும்.
சேதனர்களும் 30 பாசுரங்களையும் துதித்து எம்பெருமானின் சரணங்களில் சராணாகதி செய்து பலனை அடைய வேண்டும் என்று பலன் சொல்லும் பாசுரமாக இந்த 30ம் பாசுரத்தை அருளியுள்ளாள்.
எல்லோரும் ஆனந்தத்துடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றாள் ஆண்டாள் நாச்சியார். ஆகையால், அனைவருக்கும் அருள வேண்டும் என்ற கோதாப்பிராட்டியின் தெய்வத் தன்மை இங்கு மிளிர்கின்றது.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.