/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற போலீசுக்கு கொலை மிரட்டல்
/
ஓய்வு பெற்ற போலீசுக்கு கொலை மிரட்டல்
ADDED : டிச 09, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பூமியான்பேட்டை, நடேசன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 69; ஓய்வு பெற்ற போலீஸ்.இவர் 'வாட்ஸ் ஆப்' குரூப் ஒன்றை துவங்கி, பல்வேறு செய்திகளை பதிவிட்டு வருகிறார்.
இவரது வாட்ஸ் ஆப் குரூப்பில் செல்வராஜ் மனதை புண்படுத்தும் விதமாக மர்மநபர் ஒருவர் செய்தி பதிவிட்டார்.
இதனை செல்வராஜ் கண்டித்ததால், அந்த நபர் வெவ்வெறு மொபைல் எண்ணில் இருந்து செல்வராஜை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.