/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் நுாதன முறையில் தற்கொலை
/
ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் நுாதன முறையில் தற்கொலை
ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் நுாதன முறையில் தற்கொலை
ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் நுாதன முறையில் தற்கொலை
ADDED : நவ 08, 2025 01:36 AM
புதுச்சேரி: புற்று நோயால் அவதிப்பட்ட மாஜி அஞ்சல் துறை ஊழியர், பாலித்தின் கவரால் முகத்தை மூடி தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜன்,72; ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர். கடந்த 15ம் தேதி, இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனையில், வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதியானதால், அவரை மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து செல்ல குடும்பத்தார் திட்டமிட்டனர்.
இதனால், மன உளைச்சலுக்கான ராஜன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தலையில் பாலித்தின் கவரை மாட்டி, நைலான் கயிற்றால் கழுத்தை இருக்கிய நிலையில், சுயநினைவின்றி கிடந்தார்.
அவரை, குடும்பத்தார் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்து, ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

