/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரும்ப பெற்ற கணக்கெடுப்பு படிவங்கள்... 57.66 சதவீதம்: டிச., 4ம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
/
திரும்ப பெற்ற கணக்கெடுப்பு படிவங்கள்... 57.66 சதவீதம்: டிச., 4ம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
திரும்ப பெற்ற கணக்கெடுப்பு படிவங்கள்... 57.66 சதவீதம்: டிச., 4ம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
திரும்ப பெற்ற கணக்கெடுப்பு படிவங்கள்... 57.66 சதவீதம்: டிச., 4ம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 25, 2025 05:28 AM

புதுச்சேரி: கணக்கெடுப்பு படிவங்கள் டிச., 4ம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 10.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 95.61 பேருக்கு அதாவது, 9 லட்சத்து 76 ஆயிரத்து 747கணக்கெடுப்பு படிவங்கள் தரப்பட்டுள்ளன.அதில் திரும்ப பெறப்பட்ட படிவங்களில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரத்து 075 படிவங்கள் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரும்ப பெற்ற கணக்கெடுப்பு படிவங்களில் விகிதம் 57.66 சதவீதமாகும்.கணக்கு படிவங்கள் வேகமாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த சதவீதம் அதிகரிக்கும்.
இருப்பினும் 44,831 பேருக்கு அதாவது 4.39 பேருக்கு இதுவரை கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை.ஆன்லைனில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன் லைனில் விண்ணப்பிக்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டையிலும் பெயர் ஒரே மாதிரி இருப்பது அவசியம்.
புதுச்சேரி மாவட்டம் ஏனாம், மாகி, புதுச்சேரி உள்ளடங்கிய புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 8,51,775 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 8,08,310 பேருக்கு கணக்கெடுப்பு படிவம் அதாவது 94.90 சதவீத பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 4,86,844 பேரின் கணக்கெடுப்பு படிவம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இது 57.16 சதவீதமாகும். இம்மாவட்டத்தில் இன்னும் 43,465 பேருக்கு (5.10 சதவீதம்) கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை.
காரைக்கால் மாவட்டம் மொத்தமுள்ள 1,69,803 வாக்காளர்களில் இதுவரை 1,68, 437 பேருக்கு அதாவது 99.20 சதவீத பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 60.21 சதவீத பேரின் அதாவது 1,02,231 பேரின் கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. இம்மாவட்டத்தில் 1,366 பேருக்கு இன்னும் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை.
சரிபார்ப்பது எப்படி கணக்கெடுப்பு படிவத்தை திருப்பி கொடுத்த வாக்காளர்கள் தாங்கள் தந்த கணக்கெடுப்பு படிவங்களின் நிலையை http://voters.eci.gov.in தளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி சரிபார்க்கலாம்.டிஜிட்டல்மயமாக்கம் செய்யப்பட்ட பிறகு பார்க்க முடியும்.
2,300 ஏஜெண்டுகள் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் 962 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 30 உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள், 17 வாக்காளர் பதிவு அதிகாரிகள், 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரசியல்கட்சியினர் தரப்பில் 800 ஓட்டுச்சாவடி முகவர்கள் இருந்ததை 2,300 ஆக உயர்த்தினோம். அவர்கள் காலை, மாலை என கணக்கெடுப்பு படிவத்தை திரும்ப பெற்று சிறந்த பணியை ஆற்றி வருகின்றனர். டிசம்பர் 4ம் தேதிக்குள் கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்கள் தங்களது கடமையை உணர்ந்து ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஷ் உடனிருந்தனர்.

