/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ல.ஜ.க., தலைவருடன் அருட்தந்தை சந்திப்பு
/
ல.ஜ.க., தலைவருடன் அருட்தந்தை சந்திப்பு
ADDED : மார் 03, 2026 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த அருட்தந்தை பால் தலை மையில் முன்னாள் சப் கலெக்டர்கள் ஸ்ரீராமலு, ராஜசேகர், தாயனந்தன், தர்மசிவம் ஆகியோர் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதில், புதுச்சேரியின் கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, இளைஞர் முன்னேற்றம் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தங்களின் பங்கு இருக்கும் என உறுதியளித்தனர்.
சந்திப்பின் போது, ராபர்ட் ஜேசுதாஸ், புஷ்பநாதன், ஜேக்கப், அசரியா மற்றும் எழுத்தாளர் சங்க பொருளாளர் ஸ்டிபன் இன்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

