/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்துயிர் பெற்ற வேல்ராம்பட்டு ஏரி மீண்டும் பொலிவிழந்து வருகிறது
/
புத்துயிர் பெற்ற வேல்ராம்பட்டு ஏரி மீண்டும் பொலிவிழந்து வருகிறது
புத்துயிர் பெற்ற வேல்ராம்பட்டு ஏரி மீண்டும் பொலிவிழந்து வருகிறது
புத்துயிர் பெற்ற வேல்ராம்பட்டு ஏரி மீண்டும் பொலிவிழந்து வருகிறது
ADDED : அக் 14, 2024 08:00 AM

புதுச்சேரி : வேல்ராம்பட்டு ஏரியில் மீண்டும் ஆகாய தாமரை படர்ந்து பொலிவிழந்து வருகிறது. ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்காவிட்டால் மீண்டும் கூவமாக மாறிவிடும்.
புதுச்சேரியின் வேல்ராம்பட்டு ஏரி, 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதலியார்பேட்டை மற்றும் கொம்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர முக்கிய நீர்நிலையாக இருந்து வருகிறது.
ஆனால், ஏரி சரிவர பராமரிக்கப்படவில்லை. கடந்த 2016 வரை, இந்த ஏரியின் நிலை படு மோசமாக இருந்தது. அப்போதைய, கவர்னராக கிரண்பேடி முயற்சியால் 75 லட்சம் செலவில் சுற்றுவேலி, தார் சாலை அமைக்கப்பட்டு, புத்துயிர் பெற்றது. அத்துடன் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது. சுற்றுலா படகு சவாரியும் விடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி விடைப்பெற்ற பிறகு, மீண்டும் ஏரி சரிவர பராமரிக்கப்படவில்லை.
தற்போது ஏரியை சுற்றி இருந்த வேலிகளும் களவாடப்பட்டு எந்த பக்கத்தில் இருந்தும் ஏரிக்குள் நுழையும் அளவிற்கு மீன் பிடிக்கவும், பறவைகளை வேட்டையாடவும் திருட்டுவழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் ஏரி மாறி விட்டது. ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்காவிட்டால் மீண்டும் கூவமாக மாறிவிடும். மற்றொரு பக்கம், ஆகாயதாமரை படர்ந்து ஏரி பொலிவிழந்து வருகிறது.
கவர்னர் கிரண்பேடி காலத்தில் எப்படி இருந்த ஏரி இப்படி ஆகிவிட்டதே என்று பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரியை இணைத்து அரசு படகு சவாரியை துவக்க திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன், சுற்றுவேலி அமைத்து ஏரியை பாதுகாக்க வேண்டும்.
எனவே, தற்போதைய கவர்னர் கைலாஷ்நாதன் வேல்ராம்பட்டு ஏரியை மீட்டெடுத்து, படகு சவாரியை துவக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.