/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரிசி மூட்டை லாரி விபத்தில் சிக்கியது
/
அரிசி மூட்டை லாரி விபத்தில் சிக்கியது
ADDED : மார் 22, 2025 03:21 AM
பாகூர்: அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
விழுப்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கடலுார் நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பாகூர் சந்திப்பு அருகே சென்றபோது, அங்கு சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கான்கிரீட் கலவை கலக்கும் லாரியின் மீது நேருக்கு நேர் மோதி, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டை மீது இடித்து விபத்துக்குள்ளானது.
இதில், இரண்டு லாரியும் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் காயம் இன்றி தப்பினர். விபத்துக்குள்ளான லாரியிலிருந்த அரிசி மூட்டைகளை நேற்று மாலை வேறு ஒரு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.