/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே உரிமைகள் கிடைக்கும்: நாஜிம்
/
எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே உரிமைகள் கிடைக்கும்: நாஜிம்
எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே உரிமைகள் கிடைக்கும்: நாஜிம்
எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினால் மட்டுமே உரிமைகள் கிடைக்கும்: நாஜிம்
ADDED : அக் 13, 2025 12:54 AM
காரைக்கால்; புதுச்சேரியில் எம்.எல். ஏ.,க்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் மட்டுமே உரிமைகள் கிடைக்கும் என நாஜிம் எம்.எல்.ஏ., பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் ஐ.ஜி.,மட்டும் இருந்த போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. தற்போது உயர் அதிகாரிகள் இருந்தும் கொலைகள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் திரிசூலம் என்ற பெயரில் உண்மையான ரவுடிகள் கைது செய்யப்படுவதில்லை. போலீசார் சோதனையை துரிதபடுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பேராசியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதுகுறித்து அமைச்சர் மற்றும் இயக்குநரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. காரைக்கால் புறக்கணிக்கப்படுவதற்கு அமைச்சரை குறை கூற ஒன்றும் இல்லை. அதிகாரிகள் யாரும் சரியாக பணிகளை செய்வது கிடையாது. முதல்வர் கூறுவதை தலைமை செயலர் செய்வதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இதுப்போன்று நிர்வாக சீர்குலைவை பார்த்ததில்லை.
புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராஜ வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு அதிகாரிகளிடம் மரியாதை இ ல்லாத சூழல் காணப்படு கிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மட்டுமே எம்.எல்.ஏ.,க்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கும் என, கூறியுள்ளார்.