/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை: 15 பேர் கைது
/
பொது இடத்தில் ரகளை: 15 பேர் கைது
ADDED : அக் 07, 2025 12:58 AM
புதுச்சேரி, ; புதுச்சேரியில் பொது இடத்தில் ரகளை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் பொதுஇடத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுபவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் ரகளை செய்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் 36, அப்துல்லா 36, குருசுகுப்பம் ஜான்போஸ் 32, நவீன்குமார் 35, முத்தியால்பேட்டை கிரண் 23, முதலியார்பேட்டை ஜெகன் 23, புதுசாரம் கார்த்திக் 26, முதலியார்பேட்டை சர்குணராஜன் 25, முத்தியால்பேட்டை சிவராமன் 24, ராஜேஷ் 31, சஞ்ஜய்குமார் 24, வானூரை அடுத்த சுருவளூர் சுரேந்திரன் 23, சின்ன காலாப்பட்டு கணபதி 40, மேல்திருக்காஞ்சி வினோத் 24, விழுப்புரம் மாவட்டம் பள்ளிதென்னல் குணசீலன் 33,ஆகியாரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.