/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவானந்தபுரத்தில் நோய் பரவும் அபாயம்
/
ஜீவானந்தபுரத்தில் நோய் பரவும் அபாயம்
ADDED : பிப் 07, 2025 04:47 AM

புதுச்சேரி : ஜீவானந்தபுரம் கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஜீவானந்தபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள வடிக்கால் வாய்க்கால் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வடிக்கால் வாய்க்கால் முழுதும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, ஜீவானந்தபுரம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. ஆகையால், அப்பகுதி மக்கள் நலன்கருதி வடிக்கால் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க அரச நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.