/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் பாலாஜி நகரில் நோய் பரவும் அபாயம்
/
சாரம் பாலாஜி நகரில் நோய் பரவும் அபாயம்
ADDED : செப் 24, 2024 06:30 AM

புதுச்சேரி : சாரம், பாலாஜி நகரில் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி சாரம், பாலாஜி நகர் மெயின் ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாதாள சாக்கடை தொட்டிகள் வீடுகளின் ஓரத்தில் உள்ளது. இந்த தொட்டிகள் உடைந்துள்ளதால், பல வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சாலை மற்றும் சைடு வாய்க்கால் உடைந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.