/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., உத்தரவிட்டால் நமச்சிவாயத்தை எதிர்த்து போட்டி எம்.பி., வைத்திலிங்கம் சவால்
/
காங்., உத்தரவிட்டால் நமச்சிவாயத்தை எதிர்த்து போட்டி எம்.பி., வைத்திலிங்கம் சவால்
காங்., உத்தரவிட்டால் நமச்சிவாயத்தை எதிர்த்து போட்டி எம்.பி., வைத்திலிங்கம் சவால்
காங்., உத்தரவிட்டால் நமச்சிவாயத்தை எதிர்த்து போட்டி எம்.பி., வைத்திலிங்கம் சவால்
ADDED : ஜன 07, 2026 05:16 AM
புதுச்சேரி: சிங்கப்பூரில் கேசினோ, லாட்டரி சீட்டு இருப்பது போல் புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் கொண்டு வரபோகிறாரா என, வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி காங்., அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கூறியதாவது:
புதுச்சேரியில் ஜன., 21ம் தேதி முதல் 15 நாட்களுக்கு நடைபயணத்தை காங்., நடத்துகிறது.
ரங்கசாமியையும், நமச்சிவாயத்தையும் எதிர்த்து வேட்பாளரை ஜோஸ் சார்லஸ் நிறுத்த உள்ளாரா என்பதை சொல்ல வேண்டும்.
சிங்கப்பூரில் கேசினோ, லாட்டரி சீட்டு இருப்பது போல் இங்கு ஜோஸ் சார்லஸ் கொண்டு வரபோகிறாரா. அமைச்சர் ஜான்குமார் லாட்டரி விற்றார். பின், ஒரு தொகுதியை பிடித்தார்.
அந்த தொகுதியை லாட்டரி சீட்டு முதலாளியிடம் ஜான்குமார் விற்கிறார். புதுச்சேரியை ஜோஸ் சார்லஸ் விற்று விடுவார்.
காங்., உத்தரவிட்டால் அமைச்சர் நமச்சிவாயம் நிற்கும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவேன்' என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'வரும் தேர்தலில் கட்சி தலைமை என்னை நிற்க சொன்னால் போட்டியிடுவேன்.
50 சதவீதம் இளைஞர்களுக்கும் 50 சதவீதம் அனுபவமிக்கவர்களுக்கும் வாய்ப்பு இம்முறை தரப்படும்.
ஜோஸ் சார்லஸ் பா.ஜ., பி டீம்தான். போலி மருந்து வழக்கில் 26 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அதில் 24 பேராக மாற்றி உள்ளனர். சி.பி.ஐ.,யிடம் கோப்பு ஒப்படைக்கும் முன், இருவர் பெயரை எடுத்து விட்டனர். அவர்கள் பெயரை விரைவில் தெரிவிப்பேன். எனக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதாக கூறும் நமச்சிவாயம், ஒரு கோமாளி' என்றார்.
எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

