/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம் கொண்டாட்டம்
/
நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 05, 2025 02:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கொம்மந்தான்மேடு கிராமத்தில், காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம் கொண்டாடப்பட்டது.
காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், ஜக்கி வாசுதேவின் பிறந்த தினத்தை, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் அடுத்துள்ளகொம்மந்தான்மேடு கிராமத்தில் நடந்த விழாவில், ஈஷா பவுண்டேஷன், மற்றும் பேரூர் ஆதினம் இணைந்து, 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' என்ற திட்டத்தின் கீழ், கொம்மந்தான்மேடு பார்த்திபன் ஏற்பாட்டின் பேரில், தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில், அரச மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில், கிராம மக்கள் கலந்து கொண்டு, மரக்கன்றினை நட்டனர்.