டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆர்.கே., எல்.எம்., அணிகள் வெற்றி
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆர்.கே., எல்.எம்., அணிகள் வெற்றி
ADDED : மார் 23, 2026 08:20 PM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கம் சார்பில் 16வது டி20 கிரிக்கெட் லீக், கம்- நாக்கவுட் போட்டிகள், கோரிமேடு டோல்கேட் அருகே மொரட்டாண்டி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி துவங்கியது.
அதன்படி, 24வது போட்டியில் ரெட்டியார்பாளையம் ஆர்.கே. அணி- பூரணாங்குப்பம் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. முதலில் ஆடிய ஆர்.கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. அணியின் வினோ 112 ரன்கள் எடுத்து, தொடரில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். கோபால், கார்த்திக், தனசேகர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின் ஆடிய சேலஞ்சர்ஸ் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அணியின் கோபால் 56, விஷ்வா 47 ரன்களும் எடுத்தனர். ஆர்.கே. அணியின் ராஜகணபதி 5 விக்கெட்களை வீழ்த்தினார். வினோ ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
25 வது போட்டியில் அபிஷேகப்பாக்கம் ஜூனியர் மணி பிரதர்ஸ்(ஜே.எம்.பி) அணி- அரியாங்குப்பம் லேஜன் மகி (எல்.எம்) அணி மோதியது. முதலில் ஆடிய ஜே.எம்.பி., அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அணியின் கவுதம் 47 ரன்கள் எடுத்தார். செந்தில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின் களம் இறங்கிய எல்.எம் அணி 17 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் விக்கி 60 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் எல்.எம் அணி தொடரில் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
