/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி செல்லிப்பட்டில் சாலை மறியல்
/
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி செல்லிப்பட்டில் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி செல்லிப்பட்டில் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி செல்லிப்பட்டில் சாலை மறியல்
ADDED : பிப் 13, 2025 05:07 AM

திருக்கனுார்: செல்லிப்பட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்க வலியுறுத்தி மா.கம்யூ., மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு, வம்புப்பட்டு கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் 100 வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் மா.கம்யூ., மற்றும் பொதுமக்கள் நேற்று செல்லிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் காலை 10:30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வம்புப்பட்டு, செல்லிப்பட்டு கிளை செயலாளர்கள் ராமலிங்கம், கல்வராயன் தலைமையில் கொம்யூன் செயலாளர் அன்புமணி, மாநில குழு உறுப்பினர் மதிவாணன், நிர்வாகிகள் முத்து, ரகுநாத், நாகராஜ், சிவசங்கரி உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தகவலறிந்த திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் டெண்டுல்கர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாத பணிகளை, சேர்த்து அதிக நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் பணிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையேற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சோரப்பட்டு - செல்லிப்பட்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.