/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : அக் 27, 2025 01:30 AM

வில்லியனுார்: ஊசுடு தொகுதி அரசூர், அகரம் மற்றும் கோனேரிகுப்பம் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
ஊசுடு தொகுதி, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 25 லட்சம் திட்ட மதிப்பில் அகரம் இரட்டை வாய்க்கால் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, ரூ.21:20 லட்சம் மதிப்பில் கோனேரிகுப்பம் ராஜா நகர் பகுதிக்கு கருங்கல் சாலை அமைக்கும் பணி, ரூ. 26:50 லட்சத்தில் அரசூர் களத்துமேட்டு பகுதிக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடந்தது.
சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் சத்தியநாராயணா, இளநிலைப் பொறியாளர் பிரதீப், அண்ணா பிரபாவதி, பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், தொகுதி தலைவர் முத்தாலு முரளி உட்பட பலர் உடனிருந் தனர்.

