/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருவாண்டார்கோவில் மேம்பாலத்தில் உள்வாங்கிய சாலை சீரமைப்பு பணி
/
திருவாண்டார்கோவில் மேம்பாலத்தில் உள்வாங்கிய சாலை சீரமைப்பு பணி
திருவாண்டார்கோவில் மேம்பாலத்தில் உள்வாங்கிய சாலை சீரமைப்பு பணி
திருவாண்டார்கோவில் மேம்பாலத்தில் உள்வாங்கிய சாலை சீரமைப்பு பணி
ADDED : டிச 18, 2024 06:13 AM

திருபுவனை : திருவாண்டார்கோவில் மேம்பாலத்தின் இணைப்புச் சாலை உள்வாங்கியதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
விழுப்பரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், விழுப்புரம் முதல் கண்டமங்கலம் அடுத்த எம்.என்.குப்பம் வரை பணிகள் நிறைவடைந்து வாகன போக்குரவத்து தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி, திருவாண்டார்கோவில் மேம்பாலத்தை இணைக்கும் வடமேற்கு இரு வழிச்சாலையில் 10 மீட்டர் துாரத்திற்கு சாலை உள் வாங்கியது.
இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மேம்பாலத்தை பார்வையிட்டனர். இதையடுத்து அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.
இதையடுத்து வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சாலை உள்வாங்கிய பகுதியில் 20 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலத்திற்கு ஜே.சி.பி., மூலம் கான்கிரீட் சாலையை உடைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.