ADDED : அக் 16, 2025 11:30 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மற்றும் உள் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங் கினார். போலீஸ், பொதுப்பணி, வருவாய், உள்ளாட்சி, ஸ்மார்ட் சிட்டி, மின்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சாலை பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க, பொதுப்பணி மற்றும் மின்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும். தேவையான இடங்களில் மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.
அனைத்து சிக்னல்களும் சரியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து பகுதிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் அதிகம் பயணிக்கும் சாலைகளில் கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்க போக்குவரத்து துறை அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் பைக்கில் செல்லும் போது, கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து கல்லுாரி மாணவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.