ADDED : ஜன 25, 2025 04:47 AM

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நடந்த நடை பயணத்தை போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் கொடிசைத்து துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன், செயற் பொறியாளர் சீத்தாராம ராஜ், அங்காளன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடைபயணம் காந்தி சிலையில் துவங்கி, எஸ்.வி.பட்டேல் சாலை, மிஷன் வீதி, சம்பா கோவில், அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தது.
இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

