தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 03, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி சார்பில், இருநாள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

முதல் நாளான நேற்று முன்தினம் நேரு வீதி கிழக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு பள்ளி மாணவர்கள் கல்வி சார் களப்பயணம் மேற்கொண்டனர். மாணவர்களை வரவேற்ற இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப் இன்ஸ்பெக்டர் கொண்டா பாலாஜி ராவ் ஆகியோர் காவல் பெ பிரிவுகளுக்கு நேரில் அழைத்து சென்று விளக்கினர்.

போக்குவரத்து தொடர்பான புகார்கள் பெறப்படும் முறை, வழக்குப் பதிவு, விசாரணை, அபராதம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நகரின் பல்வேறு வீதிகள் வழியாக நடந்த இந்த ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ெஹல்மெட் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும்போது

மொபைல் பயன்படுத்த கூடாது உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us