ADDED : ஜன 20, 2024 06:00 AM

புதுச்சேரி : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய வாய், முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் புதுச்சேரி மற்றும் கிளை சுகாதாரத்துறையின் தேசிய வாய் சுகாதார திட்டம், புதுச்சேரி தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், பிம்ஸ் பல் மருத்துவ பிரிவு ஆகியவை புதுச்சேரி போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
ராஜா தியேட்டர் சந்திப்பில் போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., மாறன், தேசிய வாய் சுகாதார திட்ட நோடல் அதிகாரி கவிப்பிரியா விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். டாக்டர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்இன்ஸ்பெக்டர்கள் முருகன், அல்லாஹூதின், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றவும், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தினர்.