/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 01, 2026 05:27 AM

புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் பல் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கினார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் (கிழக்கு) நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு போக்குவரத்துவிதிகள் மற்றும் தலைக்கவசம் அணியும் அவசியத்தையும், வாகனம் ஒட்டும்போதுமொபைல் போன் உபயோகத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

