/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 09, 2026 05:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் சார்பில், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று காலை விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
நிகழ்ச்சியை எஸ்.பி., ரட்சனா சிங் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன், எலும்பியல் துறை பேராசிரியிர்கள் ஜகதீஷ் மேனன், தீப் சர்மா, ஒருங்கிணைப்பாளர் ரபீஷ்குமார், எலும்பியல் துறை இணைப் பேராசிரியர்கள் பசுபதி, பிரபு,ஜிப்மர் பேராசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு மற்றும் காயம் குறைத்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி, பொறுப்பான நடத்தை, விபத்துகள் மற்றும் சாலை போக்குவரத்து காயங்கள் பெரும்பாலும் தடுக்கக் கூடியவை என்பதை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காகவிழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
காந்தி சிலை அருகே துவங்கிய நடைபயணம், 3 கிலோமீட்டர் துாரம் ஒயிட்டவுன் முழுதும் சுற்றி, மீண்டும் காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

