/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்திரையர்பாளையத்தில் சாலை பணி துவக்கம்
/
முத்திரையர்பாளையத்தில் சாலை பணி துவக்கம்
ADDED : ஆக 14, 2025 06:40 AM

புதுச்சேரி : முத்திரையர்பாளையத்தில் வாய்க்கால் மேம்படுத்தும் பணியினை அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
இந்திரா நகர் தொகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில், திலாசுப்பேட்டை முதலியார் வீதியில் சிமெண்ட் சாலை அமைத்தல், முத்திரையர்பாளையம் மற்றும் கோவிந்தன்பேட்டையில் கழிவுநீர் வாய்க்கால் மேம்படுத்துதல், தர்மாபுரி மகாலட்சுமி நகரில் வாய்க்கால் மற்றும் தார் சாலை அமைத்தல், அய்யன்குட்டிப்பளையம் சப்தகிரி டைமண்ட் சிட்டியில் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அரசு கொறடா ஆறுமுகம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.