/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.64.98 லட்சத்தில் சாலை பணிகள் இந்திரா நகரில் அரசு கொறடா துவக்கம்
/
ரூ.64.98 லட்சத்தில் சாலை பணிகள் இந்திரா நகரில் அரசு கொறடா துவக்கம்
ரூ.64.98 லட்சத்தில் சாலை பணிகள் இந்திரா நகரில் அரசு கொறடா துவக்கம்
ரூ.64.98 லட்சத்தில் சாலை பணிகள் இந்திரா நகரில் அரசு கொறடா துவக்கம்
ADDED : பிப் 15, 2024 05:04 AM

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில், ரூ.64.98 லட்சம் மதிப்பில், சாலை, வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி, இந்திரா நகர் தொகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அகத்தியம் கோட்டம் முதன்மை சாலைக்கு வாய்க்கால் அமைத்தல் ரூ.12.84 லட்சம்; காந்தி திருநல்லுார், மருதம் நகரில் சாலை அமைத்தல் ரூ.25 லட்சம்; இந்திரா நகர் தொகுதியில் உள்ள வாய்க்காலை மேம்படுத்துதல் ரூ.12.09 லட்சம், என பல்வேறு பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி,தர்மாபுரி, தனகோடி நகர் விரிவு, கிருஷ்ணன் வீதிக்கு வாய்க்கால் மற்றும் சாலையை மேம்படுத்துதல் ரூ.7.33 லட்சம்; வீமக்கவுண்டன்பாளையம், கலை மகள் வீதியில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்படுத்துதல் ரூ.7.72 லட்சத்திற்கும் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.64.98 லட்சம்.
இந்த பணிகளை, நேற்று அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன், உதவி பொறியாளர் கலி வரதன், இளநிலை பொறியாளர் முத்தையன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

