/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 1.28 கோடியில் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு
/
ரூ. 1.28 கோடியில் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு
ரூ. 1.28 கோடியில் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு
ரூ. 1.28 கோடியில் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 21, 2025 07:03 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் 1.28 கோடி மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் ஜலகண்டேஸ்வர் நகரில், சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். தொகுதி எம்.எல்.ஏ.,விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் மூலம் 1.28 கோடி மதிப்பீட்டில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, மு தல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தலைமை பொறியாளர் வீரசெல்வன், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் மூலம், 47.67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச் முகத்துவாரம் வரை, ஆற்றை துார் வாரும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
பின், சபாநாயகர் கூறுகையில், 'நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் படகுகள், மீனவர்களின் படகுகள் ஆற்றில் குவிந்துள்ள மணலில் தரை தட்டி சேதமடைகின்றன. படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச் முகத்துவாரம் வரை ஆற்றில் மணல் துார் வரும் பணி பொதுப்பணித்துறை மூலம் துவக்கப்பட்டுள்ளது' என்றார்.