தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோரம் இறைச்சி கழிவுகள் :தொற்று நோய் ஏற்படும் அபாயம்

 சாலையோரம் இறைச்சி கழிவுகள் :தொற்று நோய் ஏற்படும் அபாயம்

 சாலையோரம் இறைச்சி கழிவுகள் :தொற்று நோய் ஏற்படும் அபாயம்


ADDED : ஏப் 14, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை - மேல்பட்டாம்பாக்கம் செல்லும் ஏரிக்கரை சாலையோரரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மடுகரை - மேல்பட்டாம்பாக்கம் சாலை வழியாக மேல்பட்டாம்பாக்கம், சொர்ணாவூர், ராம்பாக்கம், கடலுார், பண்ருட்டி, விழுப்புரம், வளவனுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையின் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களின் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மடுகரையிலிருந்து மேல்பட்டாம்பாக்கம் சாலையில் உள்ள ஏரிக்கரையோரம் மடுகரை மற்றும் அதனை சுற்றியள்ள பகுதிகளைச் சேர்ந்த சிலர் கோழியின் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், அப்பகுதி முழுதும் துார்நாற்றம் வீசுகிறது.

இதனால் இவ்வழியாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்த வாறு செல்கின்றனர். பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கழிவுகள் ஏரி தண்ணீர் கலப்பதால், ஏரியில் குடிநீர் அருந்தும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே, மடுகரை - பட்டாம்பாக்கம் சாலையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us