/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலைகளில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி
/
சாலைகளில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி
ADDED : டிச 12, 2024 06:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலைகளில் தேங்கிய மழை நீரை, நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரியில் 'பெஞ்சல்' புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை துவங்கி உள்ளது. நேற்று காலை பெய்த மழையால் புஸ்சி வீதியில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து ராட்சத மோட்டார் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டது. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி சார்பில், கனமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ரெயின்போ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆய்வு செய்தார். சாலைகளில் தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்றவும், வாய்க்கால்களை துார் வாரவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர். புதுச்சேரி நகராட்சி சார்பிலும் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாய்க்கால்களில் அடைப்புகள் நீக்கப்பட்டு, மழைநீர் எளிதாக வெளியே செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.