/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபடுத்த ரோபோ அறிமுகம்
/
போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபடுத்த ரோபோ அறிமுகம்
போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபடுத்த ரோபோ அறிமுகம்
போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபடுத்த ரோபோ அறிமுகம்
ADDED : ஜூலை 21, 2025 06:38 AM
புதுச்சேரி : கடற்கரை சாலையில் போலீசாருக்கு உதவியாக ரோந்து செல்லும் நடமாடும் நவீன ரோபோ புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு சுற்றலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள், செல்பி எடுப்பது, கடலில் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்களில் புதுச்சேரி 2ம் இடத்தை பிடித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடற்கரை சாலையில் போலீசாருக்கு ரோந்து பணிக்கு உதவியாக நவீன நடமாடும் ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நடமாடும் ரோபோவில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன ரோபோ தானாகவே நடந்து சென்று கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, கடற்கரை சாலை, மணல் பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ கடற்கரை சாலையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், பெண்களை கிண்டல் செய்பவர்கள், பொது இடத்தில் மது அருந்துபவர்கள், கடலில் தடையை மீறி குளிப்பவர்களை படம் பிடித்து உடனடியாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பிவிடும். அதனை வைத்து, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்வர்.
இந்த நடமாடும் ரோந்து ரோபோ இந்தியாவிலேயே புதுச்சேரியில் தான் முதல் முறையாக பயன்படுத்தப் படவுள்ளது குறிப்பிட்டத் தக்கது.