/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராக்கெட் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை
/
ராக்கெட் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை
ADDED : அக் 16, 2024 07:07 AM

புதுச்சேரி : இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த, பயிற்சி பட்டறையில், வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
திருவனந்தபுரம் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து, 3 நாட்கள் பயிற்சி பட்டறை நடந்தது. அதில், புதுச்சேரி வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 30 பேர் பங்கேற்றனர்.
ராக்கெட், வடிவமைப்பு அதன் பாகங்களை மாணவர்கள் வடிவமைத்து எடுத்து சென்று முதல் நாள் பயிற்சி பட்டறையில் காட்சிப்படுத்தினர். இரண்டாம் நாள் பயிற்சியில், மாணவர்கள் ராக்கெட் வடிவமைப்பு பற்றி, பாராட்டப்பட்டது.
தொடர்ந்து மூன்றாம் நாள் பயிற்சில், ராக்கெட் பற்றி, வினாடி - வினா போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளி சார்பில் பாராட்டப்பட்டனர்.