ADDED : ஜூலை 05, 2025 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது.
பாகூர் அடுத்த கரையாம்புத்துார் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 46; கூலித் தொழிலாளி. இவர், நேற்று மதியம், தனது மனைவியுடன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தது. இருவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். காற்று பலமாக வீசியதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது.
மடுகரை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இருப்பினும், வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டினுள் இருந்த துணி, பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தன.
தீ விபத்து குறித்து கரையாம்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.