/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது
/
வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது
ADDED : ஆக 26, 2025 07:12 AM
புதுச்சேரி : கருவடிக்குப்பம் சாராயக்கடையில் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியை சேர்ந்தவர் ரசூல் அகமது, 31; கோட்டக்குப்பத்தில் செல்லப்பிராணி விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று மாலை கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த பிரபல ரவுடி செழியன், 30; ரசூல் அகமதுவிடம் தகராறு செய்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டுள்ளனர். பின் மது போதையில் ரசூல் அகமது சாராயக்கடையில் படுத்துள்ளார். அப்போது ஆத்திரம் அடங்காத செழியன், அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ரசூல் அகமதுவின் தலையில் போட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த ரசூல் அகமதுவை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் தப்பியோடியசெழியனை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

