தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கைது

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கைது

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கைது


ADDED : ஜன 26, 2025 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம் : வெடிகுண்டு வீசிய வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, உருளையன்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சரத்ராஜ், 26; பிரபல ரவுடி. இவர் மீது இரு கொலை வழக்குகள் உள்ளன.

இவர், கடந்த 2019ம் ஆண்டு பெண் தர மறுத்ததால், கோட்டக்குப்பம் அல்லாப்பிச்சை வீட்டில் வெடிகுண்டு வீசினார். சரத்ராஜை கைது செய்த கோட்டக்குப்பம் போலீசார், அவர் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் ஜாமினில் வந்த சரத்ராஜ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்ய நீதிபதி வாரண்ட் பிறப்பித்தார்.

இதன்பேரில் கோட்டக்குப்பம் போலீசார், தலைமறைவாக இருந்த சரத்ராஜை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us