sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கைது


ADDED : நவ 14, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 07:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர். இவர், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மனாகவும் உள்ளார். ஜிப்மர் எதிரில் உள்ள உழவர்கரை நகராட்சி வணிக வளாகத்தில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி ஆக்கிரமித்து கடை நடத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக, சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.

சிவசங்கர் எம்.எல்.ஏ., ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்த ரவுடி ராமு, சிவசங்கர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட கூடாது என மிரட்டல் விடுத்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். ரவுடி ராமுவை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டுமொத்த வியாபாரிகள் சங்கத்தினரும் பேரணியாக சென்று கவர்னர், முதல்வரிடம் மனு அளித்தனர்.

நேற்று முன்தினம் சரணடைந்து, ஜாமின் பெற ரவுடி ராமு புதுச்சேரி நீதிமன்றம் வந்தார். எம்.எல்.ஏ.,வை மிரட்டிய வழக்கு என்பதால், ஜாமின் தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், நீதிமன்றத்தில் இருந்து ராமு எஸ்கேப் ஆனார். இந்நிலையில் நேற்று காலை ரவுடி ராமுவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us