/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடி தாடி அய்யனார் குண்டர் சட்டத்தில் கைது
/
ரவுடி தாடி அய்யனார் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : நவ 06, 2025 05:37 AM

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம், அரசங்குளம், மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யனார் (எ) தாடி அய்யனார் என்ற ராஜதுரை, 40. இவர் மீது 4 கொலை, 4 கொலை முயற்சி, 3 அடிதடி, கஞ்சா விற்பனை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
மேலும், மங்கலம் போலீஸ் நிலையத்தின் சரித்திர குற்ற பதிவேடு கொண்ட குற்றவாளி ஆவார்.
தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள ரவுடி தாடி அய்யனார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய, கலெக்டருக்குமங்கலம் போலீசார் பரிந்துரை செய்திருந்தனர்.
இதையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், தாடி அய்யனார் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அதற்கான உத்தரவை காலாப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார்.

