தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டி 20 கிரிக்கெட் லீக் போட்டி ராயல் ரேஞ்சர்ஸ், சேலஞ்சர் அணிகள் வெற்றி

 டி 20 கிரிக்கெட் லீக் போட்டி ராயல் ரேஞ்சர்ஸ், சேலஞ்சர் அணிகள் வெற்றி

 டி 20 கிரிக்கெட் லீக் போட்டி ராயல் ரேஞ்சர்ஸ், சேலஞ்சர் அணிகள் வெற்றி


ADDED : பிப் 08, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16வது டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் மொரட்டாண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதில், புதுச்சேரி காவல்துறை, வழக்கறிஞர்கள், ஜிப்மர் கிரிக்கெட் அணிகள் உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியினை டாக்டர் சரவணகுமார் துவக்கி வைத்தார்.

நேற்று நடந்த முதல் போட்டியில் உப்பளம் ராயல் ரேஞ்சர்ஸ் அணியும், லாஸ்பேட்டை ஆல்வின் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஆல்வின் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ராயல் ரேஞ்சர்ஸ் அணி 12 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயல் ரேஞ்சர்ஸ் அணியின் கவி 37 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2வது போட்டியில் தவளக்குப்பம் சேலஞ்சர்ஸ் அணியும், சேலியமேடு அணியும் மோதின. முதலில் ஆடிய சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கார்த்திக் 45 ரன்கள் எடுத்திருந்தார். பின் விளையாடிய சேலிமேடு கிரிக்கெட் அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன் மட்டுமே எடுத்தது. சேலஞ்சர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்பாடுகளை கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் ராம், முத்து, விக்கி, அஜய் ஆகியோர் செய்திருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us