UPDATED : அக் 03, 2026 06:47 AM
ADDED : அக் 02, 2026 06:44 PM

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியில் காந்தி ஜெயந்தியையொட்டி, 1 ரூபாய்க்கு வேட்டி வழங்கியதால், பொதுமக்கள் முண்டியடித்து வாங்கிசென்றனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலையம் எதிரே தனியார் காதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் கொள்கையான கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், காந்தி ஜெயந்தியையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டும் 1 ரூபாய்க்கு ஒரு வேட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று காலை விற்பனை தொடங்கியதும், திருநள்ளாறு பகுதி மக்கள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிக்ளும் வேட்டி வாங்குவதற்காக கடை முன், திரண்டனர். அப்பகுதியில் கூட்டம் அலைமோதியது.
கடை உரிமையாளர் லோகு முன்னிலையில் 1 ரூபாய்க்கு வேட்டி வழங்கப்பட்டது. 100 வேட்டிகளும் 30 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. கடந்த ஆறு ஆண்டுகளாக காந்தி ஜெயந்தியையொட்டி இதேபோல் இக்கடையில் 1 ரூபாய்க்கு வேட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
