/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறுதி ஊர்வலத்தில் மாலைகளை சாலையில் வீசியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல்

ADDED : அக் 08, 2025 12:06 AM
புதுச்சேரி : இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை சாலையில் வீசியவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
ஐகோர்ட் அறிவுறுத்தலின்பேரில், பொதுமக்களின் போக்குவரத்து நலன் மற்றும் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இறுதி ஊர்வலத்தின் போது, இறந்தவரின் உடல் மீது சார்த்தப்படும் மாலைகள், மலர் வளையங்களை சாலையில் வீசாமல், இடுகாட்டிலும், சாலையின் ஓரமாக வைக்க வேண்டும். தவறினால், இறப்பினை பதிவு செய்யும் போது, உரிய அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனை செயல்படுத்த நகராட்சி ஊழியர்களால் இறுதி ஊர்வலங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. எச்சரிக்கையை மீறி இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை சாலையில் வீசிய 10 பேரிடம் தலா ரூ. 1,000 வீதம் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தகவல் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இறப்பினை பதிவு செய்யும் போது அபராதம் வசூலித்த பின்னே சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் நகராட்சியின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.