தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ.1.22 லட்சம் 'அபேஸ்'

4 பேரிடம் ரூ.1.22 லட்சம் 'அபேஸ்'

4 பேரிடம் ரூ.1.22 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஜூன் 06, 2025 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரியில் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.1.22 லட்சம் இழந்துள்ளனர்.

வில்லியனுாரை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் முதலீடு செய்து, சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 52 ஆயிரத்து 400 ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.

இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த நபர், பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஏ.சி., உதிரி பாகங்களை 27 ஆயிரத்து 200 ரூபாய்க்கு ஆர்டர் செய்து இழந்துள்ளார். மூலக்குளத்தை சேர்ந்த நபர் 40 ஆயிரம், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபர் 3 ஆயிரம் என, மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us