புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 1.28 லட்சம் 'அபேஸ்'
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 1.28 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஏப் 03, 2026 03:29 PM
புதுச்சேரி: பு துச்சேரியில் 4 பேரிடம் 1.28 லட்சம் ரூபாய் மோசடி செய்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளத்தை சேர்ந்த நபருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில், அவரது நண்பர் பேசுவதாகவும், அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறினார். அதையடுத்து, அவரது வங்கி கணக் கிற்கு 70 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
கரசூரை சேர்ந்த பெண்ணிடம் மர்ம நபர், வங்கி அதிகாரி பேசுவதாகவும், ஏ.டி.எம்., கார்டின், வரம்பை உயர்த்த, கார்டு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டார். அந்த விபரங்களை அனுப்பிய அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
மேலும், மேட்டுப்பாளை த்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் 3 ஆயிரம் ரூபாய், முதலியார்பேட்டை சேர்ந்த நபரிடம் 7 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின் றனர்.
