/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நபரிடம் ரூ.1.45 லட்சம் 'அபேஸ்'
/
புதுச்சேரி நபரிடம் ரூ.1.45 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூலை 30, 2025 11:42 PM
புதுச்சேரி: ஐபோன் ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ரூ.1.45 லட்சத்தை புதுச்சேரி நபர் இழந்துள்ளார்.
குருசுக்குப்பத்தை சேர்ந்த நபரின் நண்பர் ஹிமான்ஷூ ஜனா என்பவர், அறிமுகம் இல்லாத ஒருவர் அதிக தள்ளுபடியில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மர்மநபரிடம் ஆன்லைன் மூலம் முதலில் சிறிய பொருட்களை குறைந்த விலைக்கு ஆர்டர் செய்தார். அவை சரியாக இருந்ததால், நம்பிக்கையின் பேரில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 900 ரூபாய் முன்பணம் செலுத்தி ஐபோன், தனிஷ்க் தங்க நாணயம் ஆர்டர் செய்தார். அதன்பின், அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், சோலை நகரை சேர்ந்த பெண், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 662 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். மேலும், கொம்பாக்கத்தை சேர்ந்த நபர் 35 ஆயிரத்து 552, முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் 30 ஆயிரம் என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 114 ரூபாய் இழந்துள்ளனர்.
புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.