ரூ. 1.57 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் காரைக்காலில் இருவர் கைது
ரூ. 1.57 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் காரைக்காலில் இருவர் கைது
ADDED : செப் 20, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் ரூ. 1.57 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
காரைக்கால், நிரவி சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். நிரவி அண்ணன் கோவில் அருகில் சந்தேகப்படும்படி வந்த பைக்கை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இந்தது.
விசாரணையில் பைக்கை ஓட்டி வந்தது விழிதியூர் நடுத்தெரு அருள் அய்யப்பன், 29, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் ரவி, 54, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
