/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
13 பேரிடம் ரூ.16.50 லட்சம் 'அபேஸ்'
/
13 பேரிடம் ரூ.16.50 லட்சம் 'அபேஸ்'
ADDED : செப் 03, 2025 07:10 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 13 பேரிடம் 16.50 லட்சம் ரூபாயை சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.
உப்பளத்தை சேர்ந்த நபருக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த குறுச்செய்தியில், வட்டார போக்குவரத்து அதிகாரி அனுப்புவது போன்ற இ - செலான் இருந்தது. அதை உண்மை என நம்பி, அதை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்ட தனது வங்கி விபரங்களை தெரிவித்தார்.
அதன்பின், அவரது வங்கி கணக்கில் இருந்த 3 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் 5 ஆயிரம், நைனார்மண்ட பத்தை சேர்ந்த நபர் ஒரு லட்சத்து 49 ஆயிரம், கொம்பாக்கம் நபர், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 830, லாஸ்பேட்டை பெண் 3 லட்சத்து 75 ஆயிரம், தட்டாஞ்சாவடி நபர் 19 ஆயிரத்து 600, ராதாகிருஷ்ணன் நகர் நபர் 16 ஆயிரத்து 700, முருங்கபாக்கம் பெண் 2 லட்சத்து 45 ஆயிரத்து 300, வீமன்நகர் நபர் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 114, சண்முகாபுரம் நபர் 11 ஆயிரம், குண்டுபாளையம் நபர் 32 ஆயிரத்து 676, மங்கலம் நபர் 10 ஆயிரம், ரங்கபிள்ளை வீதியை சேர்ந்த நபர் 45 ஆயிரம் என, 13 பேர் 16 லட்சத்து 50 ஆயிரத்து 720 ரூபாய் இழந்துள்ளனர்.
புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.