தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பல்நோக்கு பணியாளர்களுக்கு ரூ.16.96 கோடி பணிக்கொடை வழங்கல்

பல்நோக்கு பணியாளர்களுக்கு ரூ.16.96 கோடி பணிக்கொடை வழங்கல்

பல்நோக்கு பணியாளர்களுக்கு ரூ.16.96 கோடி பணிக்கொடை வழங்கல்


ADDED : நவ 05, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர்கள், உதவியாளர்ளுக்கு பணிக்கொடை வழங்கப்பட்டது.

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்குப் பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (நவ.,5) நடந்தது.

முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சிவக்கொழுந்து ஆகியோர் கலந்துகொண்டு, மொத்தம் 1561 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 16 கோடியே 95 லட்சத்து 52 ஆயிரத்து 961 ரூபாய் மதிப்பிலான பணிக்கொடையை வழங்கினர்.

இதில், 361 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்குப் பணிக்கொடையாக 12.45 கோடி ரூபாயும், தற்போது பணியில் உள்ள 1200 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பணிக்கொடை காப்பீட்டுத் தவணையில் ஒரு பகுதியை எல்.ஐ.சி. நிறுவனத்திற்குச் செலுத்த 4.50 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயலட்சுமி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us