தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ. 1.7 லட்சம் 'அபேஸ்'

4 பேரிடம் ரூ. 1.7 லட்சம் 'அபேஸ்'

4 பேரிடம் ரூ. 1.7 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஜூலை 20, 2025 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2025 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியில், 4 பேரிடம் 1.7 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் உறவினர் பெயரில் போலியாக, இன்ஸ்டாகிராம் ஐடியை, மர்ம நபர் ஒருவர் உருவாக்கினார். அதில், அவசர உதவிக்கு பணம் தேவை எனவும், வங்கி கணக்கு விபரங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினார். அதை நம்பிய அவர், 20 ஆயிரத்து 300 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.

கதிர்காமத்தை சேர்ந்த பெண் ஒருவர், இணைதளத்தில் வந்த விளம்பரத்தின் மூலம் சமையல் எண்ணெய் வாங்க, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். லாஸ்பேட்டையை சேர்ந்த நபர், லோன் ஆப் மூலம் கடன் பெற்று, அதனை அடைத்தார். இவரை தொடர்பு கொண்ட நபர், பணம் மேலும், கட்ட வேண்டும் இல்லை எனில், உனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டினார். அதற்கு பயந்து அவர், 32 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். முத்தியால்பேட்டையை சேர்ந்த நபர், 5 ஆயிரத்து 300 அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார்.

இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us